கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது

கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டு, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44), இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். கோவை சூலூரில் விருமாண்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செட் அமைத்துத் தங்கி இருந்து லாரி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் லாரியில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமாருக்கும், விருமாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது விருமாண்டிக்கு ஆதரவாகத் திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி 22 என்ற வாலிபர் ராஜ் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...