கோவை சிங்காநல்லூர் அருகே தீக்குளித்து முதியவர் பலி..!

சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவையில் தீக்குளித்து முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்கிற ராமசாமி (63). இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக வள்ளி (53) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ராமசாமிக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக எல்லோரிடமும் அவர் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...