கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று: அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனுடைய முடிவு நாளை தெரியவரும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்கு பரிசோதனையில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னுடைய முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், முன் பகுதி, வாசல் ஆகிய பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.

தொடர்ந்து 3 மாடி கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மை துறை, வருவாய்த்துறை, புவியியல் ஆராய்ச்சி துறை, சமூக நலத்துறைஉட்பட பல்வேறு விதமான அரசு துறைகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு அலுவலகத்திலும் 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்துஉடனடியாக இன்று பணிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனுடைய முடிவு நாளை தெரியவரும். அதனால் இருமல், சளிக் காய்ச்சல் உள்ள அலுவலர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...