கோவையில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாநகர் பகுதிகளில் அரசியல் கட்சி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டு வ‌ருகின்ற‌ன.


கோவை: கோவை மாநகர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் த‌ற்பொழுது அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் பிப்ர‌வ‌ரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் நேற்று மாலை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் படம் அகற்றப்பட்டன, மேலும் அரசின் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.



கோவை உக்கடம் டவுன்ஹால் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இது தவிர அங்கு எழுதப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் பெயிண்ட் கொண்டு அளிக்கப்பட்டது.



அத்துடன் அவினாசி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் விளம்பர பதாகைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...