தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக, கோவையில் 24 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலை நடத்துவது என்ற அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை இன்று வெளியிடவுள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், என 811 பதிவிகளுக்கான நேரடி தேர்தல் நடைபெறவிருகின்றது. கோவையில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளது. 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு, நாளை முதல் வேட்புமனு பெறப்படும்.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் 24 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாகவும், உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.