மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


கோவை: பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நிர்வாகிகளைத் தரக்குறைவாக விமர்சித்து வரும் மலேசியா மஞ்சு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

பனங்காட்டு படை கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் குட்டி என்ற யோவேல் நாடார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் எங்கள் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகோபாலகிருஷ்ணன் என்ற ஹரி நாடார் என்பவரை ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டுவதாகவும், சில நபர்களின் தூண்டுதலின் பேரில் பனங்காட்டு படை கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்து மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு, விசாவின் அடிப்படையில் இந்தியாவில் பல மாதங்களாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...