கோவையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிப்பு..!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

பச்சரிசி, கரும்பு, மிளகு, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு இதுவரை 94 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொங்கல் பரிசு விநியோகம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் வழங்க வேண்டிய அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் முடிந்து பின்னரும் இதுவரை வாங்காத பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை ஆவாரம்பாளையம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...