மேலும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
கோவை: குடியரசு தின விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாயுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், ரயில் தண்டவாளங்கள், பார்சல் அலுவலகத்தில் மோப்ப நாயுடனும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித்திருந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, தற்போது கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளதால் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.