2 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: அதிரடியாக பறிமுதல் செய்த பொள்ளாச்சி போலீஸ்!

பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் வழியாகச் செல்லும் சாலைகளைக் கடந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாகவும்,ஊரடங்கு நாட்களின்போது, அத்தியாவசிய பொருட்கள் என கூறி, சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியைப் பதுக்கிக் கடத்துவதாகவும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இந்நிலையில், நேற்று காலையில், நடுப்புணி அருகே சென்றாம்பாளையம் பாலம் அருகே, புட்செல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகக் கேரள பதிவு எண்கொண்ட சரக்கு வாகனத்தைநிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.



சந்தேகமடைந்த போலீசார், சரக்கு வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில், சுமார் 50 கிலோ எடையில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதையறிந்தனர். விசாரணையில், பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுநர் ராஜாமன்சூர்அலி (38) மற்றும் பைக்கில் வந்த, மணிகண்டன் (35), சக்திவேல் (36) ஆகியோரையும் கைது செய்தனர். சரக்கு வாகனத்துடன் 2 டன்ரேஷன் அரிசியையும், பயன்படுத்தப்பட்ட மொபட்டையும்பறிமுதல் செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...