தூய்மை பணியின் போது, வன எல்லையில் இருந்து சுமார் 750 மீட்டர் வரை ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களை சேகரிக்கப்பட்டு நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவு, போளுவாம்பட்டி பிளாக் II R.F பூண்டி வடக்கு சுற்றுக்கு உட்பட்ட வன எல்லையில் இருந்து சுமார் 750 மீட்டர் வரை உள்ள சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற பொருட்களை சேகரிக்கப்பட்டது.
இன்று 22.01.2022 ம் தேதி காலை 9.00 மணியளவில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தி.சரவணன் அவர்களின் தலைமையிலும், வனப் பணியாளர்களுடனும், தொண்டாமுத்தூர் வருவாய் அலுவலர்கள் (RI, VAO'S), ஆலாந்துறை காவல்துறையினர், நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், துப்புறவு பணியாளர்கள் இணைந்து வைதேகி சராகம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.