கோவை கிணத்துக்கடவு அருகே திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ஓட்டுநர் தற்கொலை..!

இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ரங்கேகவுண்டர்புதூர் ஆத்துகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி(63), இவரது மகன் ஆனந்த்(36) ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ஆனந்திற்கு திருமணமாகாத நிலையில் அமுதா என்ற திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடிபோதையில் வரும் ஆனந்த் அமுதாவிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததால் ஆனந்தை விட்டு அமுதா சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஆனந்த் நேற்று மதுபோதையில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...