நூலுக்கு மானியம் வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் பாஜக சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்..!

பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நூலுக்கு மானியம் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நூலுக்கு மானியம் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.



திருப்பூரின் பிரதான தொழிலான பின்னலாடை துறைக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே நூலின் விலை ஏற்றமாகவே இருந்து வருவதால் பின்னலாடை துறையினர் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை மத்திய, மாநில அரசுகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த வருடம் முழு அடைப்பு, இந்த மாதம் இரு நாட்கள் வேலை நிறுத்தம் என பல்வேறு கவன ஈர்ப்புகளை பின்னலாடை தொழில் துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நூல் மற்றும் பஞ்சுகளுக்கு மானியங்களை வழங்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி திருப்பூரில் பா.ஜ.க சார்பில் இன்று காலை முதல் மாலை வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் புஷ்பா சிக்னல் சந்திப்பில் பா.ஜ.க சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...