கோவை சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார். 



இந்த பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என பத்து தொகுதிகளில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 06 ஆயிரத்து 824 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 2 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 276 பேரும் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து வீடு மாறியவர்கள், உயிரிழந்தவர்கள், பல முறை பதிவு செய்தவர்கள் என 91 ஆயிரத்து 54 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...