கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி ஒரு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்..!

வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜ வீதி பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் 14 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி ராஜ வீதி பகுதியில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி 80வது வார்டு ரஞ்சய கவுண்டர் வீதியில் கடந்த 30ம் தேதி தூய்மைப் பணியாளர் பெண் ஒருவரை அங்கு வசித்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை எதிர் வழக்காக தூய்மைப் பணியாளர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...