கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை இடங்களை வீடியோ எடுத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு...!

செங்கல் சூளை இடங்களை சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்த போது, செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது.


கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை இடங்களை வீடியோ எடுத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் நேற்றைய தினம் செங்கல் சூளை இடங்களை சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்த நிலையில் அவர்களிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் சமூக ஆர்வலர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு திரண்டவர்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரின் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆதரவாளர்கள் 7 பேர்(VKV சுந்தரராஜ், பரசுராம், கணேஷன், பிரபாகரன், மருதையன், ஜீவானந்தம், சுதபிரியன்) மீது 5 பிரிவுகள் (147, 323, 427, 506/2, 379) கீழும், செங்கல் சூளையினர் அளித்த புகாரின் பேரில் சமூக ஆர்வலர்கள் கணேஷன், மோகன், மருத்துவர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது (447, 294b, 506/2, 324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...