கோவையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்..!

கோவை மாநகர் ஸ்டேட் பேங்க் சாலையில் இன்று முதல் ஜன.,12ம் தேதி வரை 16 நாட்கள் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.


கோவை: கோவை மாநகர் ஸ்டேட் பேங்க் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் ஸ்டேட் பேங்க் சாலையில் இன்று முதல் ஜன.,12ம் தேதி வரை 16 நாட்கள் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதையொட்டி ஸ்டேட் பேங்க் சாலை, ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அவிநாசி சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் டவுன் பஸ்கள், சரக்கு வாகனங்கள் அனைத்தும், உப்பிலிபாளையம் சிக்னல், பழைய மேம்பாலம் வழியாக கூட்ஷெட் சாலையை அடைந்து உக்கடம் செல்லலாம்.

லங்கா கார்னர், அரசு மருத்துவமனை, கிளாசிக் டவர் சந்திப்பு, மேற்கு கிளப் சாலை, பந்தய சாலை, சுங்கம் ரவுண்டானா, திருச்சி சாலைக்கும் செல்லலாம்.

அவிநாசி சாலை, அண்ணாதுரை சிலை சந்திப்பில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், ஹூசூர் சாலை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா, கே.ஜி., தியேட்டர் சந்திப்பு, அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து அரசு மருத்துவமனை, லங்கா கார்னர் வழியாக, உக்கடம் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் செல்லலாம்.

பழைய மேம்பாலம் மற்றும் நஞ்சப்பா சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள், உப்பிலிபாளையம் சந்திப்பு, செஞ்சிலுவை சங்கம் சந்திப்பு, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா, கே.ஜி., தியேட்டர் சந்திப்பு, அரசு கலைக்கல்லுாரி சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பை அடையலாம்.

திருச்சி சாலை மற்றும் உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல், ஒரு வழிப்பாதையில் ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லலாம்.

இத்தகவலை, கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...