கண் பார்வை இல்லாமல் சியாச்சின் பனிமலையில் ஏறி உலக சாதனை படைத்த கோவை மேஜர்..!! பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தேர்வு..!

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும், விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: இமயமலையில் உள்ள சியாச்சின் பனிமலை உலகிலேயே ஆபத்தான பனி மலைகளில் ஒன்று. இங்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் உள்ளது. சாதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்றின் அளவில் இருந்து 20 சதவீதம் மட்டுமே சியாச்சின் பனிமலை சுவாசிக்க முடியும்.

இத்தகைய சவால் நிறைந்த பனிமலையில் உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் 8 மாற்றுத்திறனாளிகள் சிகரம் தொட்டு சாதனை படைத்துள்ளனர்.



சாதிக்க ஊனம் ஒரு தடையில்லை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பல்வேறு உடல் குறைபாடுகளுடைய 8 பேர் கொண்ட இந்திய குழு உலகின் மிக உயரமான பனிப்பாறையான சியாச்சின் மலையின் சிகரம் தொட்டு மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தனர். இதில் கோவையை சார்ந்த வீரர் ஒருவர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.



கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேஜர் துவாரகேஷ். 18 வயது இருக்கும் போதே இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர், பணியில் இருக்கும் போது எதிர்பாராத விபத்து காரணமாக தன்னுடைய 2 கண் பார்வையையும் இழந்தார். அதன் பிறகு தன்னுடைய விடா முயற்சி காரணமாக பல்வேறு சாதனைகளை புரிந்த இவர், தற்போது இராணுவத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில், கண் மற்றும் கை குறைபாடுகள் காணப்பட்ட 20 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு சியாச்சின் பனிமலையில் ஏற அனுமதி கேட்டது. இந்தியா முழுவதும் இதற்கு 250க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். 6 மாதங்கள் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்ட பிறகு, உலகின் சவாலான நிலப்பரப்புகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஏறி சாதனை படைக்கும் "லேண்ட் வேர்ல்டு ரெக்கார்டு" முயற்சிக்காக இறுதியாக 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கோவையைச் சேர்ந்த மேஜர் துவாரகேஷிம் ஒருவர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் சிறப்பு பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் குழுவினர் சியாச்சின் பனிமலையின் சிகரத்தை தொட்டனர்.



"ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்" என்று இந்த சாதனை பயணத்திற்கு பெயரிடப்பட்டது. சியாச்சின் கேம்பில் இருந்து ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணம் தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தொடக்கி, செப்டம்பர் 12-ம் தேதி மலையுச்சியை அடைந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் குமார் போஸ்ட்டை அடைந்ததன் மூலம், 8 மாற்றுதிறனாளிகள் அடங்கிய குழு இந்த சிறப்பு சாதனையை படைத்து அனைவரையும் திகைக்க செய்தது. இந்த சாதனை இந்திய ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் உலக சாதனை படைக்க பட்டதாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ராணுவ வீரர் மேஜர் துவாரகேஷ் கூறியதாவது;

எதிர்பாராத விபத்து காரணமாக கண்கள் இழந்தாலும் தொடர்ந்து இராணுவத்தின் உதவியோடு இங்கு பணியாற்றி வருகிறேன். இன்ஜினியரிங் மற்றும் மனித வள ஆராய்ச்சி போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இப்போது நீச்சல் போட்டியில் பாரா ஒலிம்பிக்யில் தேர்வாகி உள்ளேன்.

சியாச்சின் பனிமலை என்பது சவாலான ஒன்று. இங்கு -30 டிகிரிக்கு கீழ் காலநிலை நிலவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் இந்த சவாலான பயணத்தில், தமிழகத்தில் இருந்து நான் மட்டுமே கலந்து கொண்டேன். மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டவே இந்த சவாலான சாகச பயணத்தை தொடங்கினேன்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சாதனை புரிவார்கள் என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...