மேலும், கடையிலிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் பெட்டிக்கடையில் 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
கோவை மாநகர போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருள்கள் குட்கா பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்பட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து கோவையில் பல்வேறு கோணங்களில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார் (33). இவர் கோவை பீளமேடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். இதில் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து சந்தன் குமாரை போலீசார் கைது செய்தனர்.