கோவையில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தி.மு.கவினர் புகார் மனு..!

அ.தி.மு.க MLA பிஆர்ஜி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தி.மு.கவினர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க MLA பிஆர்ஜி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தி.மு.கவினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கடந்த 7.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று கோவை - அவினாசி சாலை, அண்ணா சிலை அருகே உள்ள கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்திலும் பேசியிருந்தார்.

இதனை கண்டித்து கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் அரசூர் பூபதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ், சரவணம்பட்டி பகுதி பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, வார்டு செயலாளர் கதிர்வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நவீன்பிரபு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாபு உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் E3 சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரை பெற்ற காவல்துறை ஆய்வாளர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...