பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளை எம்எல்ஏ அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு..!

மேலும், சமுதாயக்கூடம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாருக்கு, உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றார்.


கோவை: வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் மற்றும் அங்கலகுறிச்சி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்

அப்போது, 10-ஆவது வார்டு சமுதாயக்கூடம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் புகார் அளித்தனர். அதை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

பின்னர், சமுதாயக்கூடம் பகுதியில் பாதுகாப்பான முறையில் விரைவில் தடுப்பு வேலிகள் அமைத்துக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த ஆய்வில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கார்த்திக், அப்புசாமி, ஜிகே சுந்தரம், ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிரகதீஷ், கோட்டூர் குணசீலன், அருண் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...