முறைகேடு புகார் எதிரொலி: கோவை பெரியமாரியம்மன் கோவில், இனி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்..!

நன்கொடை முறைகேடு புகாரின் பேரில், பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர், கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை ஹேப் காலேஜ் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெரிய மாரியம்மன் கோவிலில், வரவு செலவுகளை சரியாக காட்டவில்லை என புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்டன.

கோவில் நிர்வாகிகள் மாற்றப்பட்ட பின்பும், இந்த ஆண்டும் கோவிலின் கணக்குகள் சரிவர காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய 70 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ஆகியவை குறித்த விவரமும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர், முறைகேடு நடைபெற்று வருவதால், பெரிய மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், என கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்பினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆணையாளர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலர்கள், உமாமகேஸ்வரி, கனகராஜ், முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகளை கணக்கெடுத்து உண்டியலுக்கு சீல் வைத்தனர். மேலும், அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...