கோவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..! தத்ரூபமாக நடித்துக் காட்டிய ஆசிரியைகள்..!!

குழந்தைகளிடம் உடலில் தொடக்கூடாத இடங்களைப் பட்டியலிட்டு அத்தகைய இடங்களில் தொட்டு பேசுபவர்கள் குறித்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர்.



கோவை: கோவையில் அதிகரித்து வரும் குழந்தைகளின் மீதான வன்கொடுமை சம்பவங்களை கருத்தில் கொண்டு ஸ்ரீ கோபால் நாயுடு குழந்தைகள் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் ரவிசாம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



பள்ளி ஆசிரியைகள் குழந்தைகளுக்கு ஒருவர் நல்ல எண்ணத்தில் தொடுவது மற்றும் கெட்ட எண்ணத்தில் தொடுவது குறித்த வித்தியாசங்களை தத்ரூபமாக நடித்துக் காட்டி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



குறிப்பாக, குழந்தைகளிடம் ஆசிரியைகள் முன்பின் தெரியாத நபர்களுடன் கைகுலுக்குதல், கைகளைத் தட்டி ஹைபை (Hifi) செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து குழந்தைகளிடம் உடலில் தொடக்கூடாத இடங்களை பட்டியலிட்டு அத்தகைய இடங்களில் தொட்டு பேசுபவர்கள் குறித்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர்.

ஆசிரியைகள் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மாணவ மாணவியரிடம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. பள்ளி நிர்வாக அதிகாரி கிரிஜா ரமேஷ், முதல்வர் வித்யா மற்றும் ஆசிரியைகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...