கோவை கரும்பு கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் - இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை..!

அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை கரும்பு கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

கோவை உக்கடம் கரும்பு கடை செல்ல ராவுத்தர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேல் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது எனறும், பல்வேறு குழந்தைகளை உருவாக்கிய அங்கன்வாடி மையம் தற்போது அழிவு நிலையில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்த அங்கன்வாடி மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும், தற்போது இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மேலும், அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள மரம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தின் மேல் சாய்ந்துள்ளதால் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதாகவும், கடந்த பல நாட்களாகவே கோவையில் தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் சேதமடைந்த கட்டிடத்தின் ஓடு விரிசல் வழியாக மழைநீர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே அதிகமாக தேங்கி நிற்கின்றது எனவும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு வாழும் பொது மக்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினரிடம் பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கோவை கரும்பு கடை ராவுத்தர் வீதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக ஆய்வு செய்து சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக புதுப்பித்து, அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...