கோவையில் ரயில் மோதி 3-யானைகள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு..!

கோவை நவக்கரையில் ரயில் மோதி 3-யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை நவக்கரையில் ரயில் மோதி 3-யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாவட்டம் மதுக்காரையை அடுத்த நவகரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணிப் பெண் யானை உட்பட மூன்று யானைகள் உயிரிழந்தது. இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சுபைர், அகில் ஆகிய இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிப் பெண் யானை, மக்னா யானை, குட்டி பெண் யானை என 3 யானைகள் பலியான விவகாரம் வன ஆர்வலர்கள், பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் ரயில் மோதி யானைகள் பலியாகும் இதுபோன்ற மரணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் இன்று பிற்பகல் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது விபத்து நடந்த பகுதியில் உள்ள "ஏ" மற்றும் "பி" ஆகிய இரு ரயில் பாதைகளிலும் கூடுதல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.



மேலும் இரவு நேரத்தில் வன ஊழியர்களின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், கண்காணிப்பு பணியை தெர்மல் டிரோன் கேமராக்கள் மூலமும் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். விபத்து ஏற்பட்ட பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளையும் கேட்டறிந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...