பைக்காரா அணையில் படகு சவாரி செய்யும்பொழுது கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டுக்கொண்டிருந்த போது, வீடியோ எடுத்துள்ளார்.
நீலகிரி: பைக்காரா அணையில் உற்சாக குளியல் போட்ட புலியின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி வனக் கோட்டத்தில் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
ஊட்டி கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையானது அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது.
இந்த அணையின் கரையோரங்களில் படகு சவாரி செய்யும் போது அவ்வப்போது மான், காட்டு மாடுகள், புலி உள்ளிட்ட வன விலங்குகள் நீர் அருந்த வருவதை காண முடியும்.
இந்நிலையில், பைக்காரா அணையில் படகு சவாரி செய்யும்பொழுது கரையோரத்தில் புலி ஒன்று நீரில் குளியல் போட்டுக்கொண்டிருந்தது.
அப்போது, படகு அருகில் வருவதை பார்த்தவுடன் நீரிலிருந்து புலி கரைக்கு சென்று வனப்பகுதிக்குச் சென்று மறைந்தது.
இதனை படகில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.