சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் சாலையோரத்தில் முதியவர் ஒருவர் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை அவிநாசி சாலையில் பீளமேடு ஆர்.கே.மில் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக சவுரிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.