தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததற்கு காரணம் என்னவென்று கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க கோரி பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியிலிருந்து 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் இருந்து 10 ரூபாய் குறைத்தது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில் தமிழக அரசு விலையை குறைக்கவில்லை என பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, 2014 - ஆம் ஆண்டில், பெட்ரோல் மீது ரூ.9.20 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ரூ. 32.90 ஆக உயர்த்தியிருந்தது. அதேபோன்று, 2014 - ல் டீசல் மீது ரூ.3.46 ஆக இருந்த ஒன்றிய அரசின் வரி, 2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருந்தது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் ஒன்றிய அரசின் வரியை உயர்த்தியிருந்தது.
இதனிடையே, மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியிலிருந்து 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் இருந்து 10 ரூபாய் குறைத்தது.
ஆனாலும், தமிழக அரசு இந்த விலையை குறைக்காததற்கு காரணம் என்னவென்று கேட்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.