கோவையில் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதித்த ஏழை குழந்தைகளின் பெற்றோர் வாழ்வாதாரத்தை காக்க பசுமாடுகள் வழங்கும் 'சக்தி' திட்டம் துவக்கம்..!

இதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தேவைப்படும் இன்சுலின் மற்றும் மாத்திரைகள் வாங்க தாங்களாகவே வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என, 'இதயங்கள் அறக்கட்டளை' நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.


கோவை: 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதித்த ஏழை குழந்தைகளின் பெற்றோர் வாழ்வாதாரத்தை காக்க பசுமாடுகள் வழங்கும் 'சக்தி' திட்டத்தை துவங்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தேவைப்படும் இன்சுலின் மற்றும் மாத்திரைகள் வாங்க தாங்களாகவே வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என, 'இதயங்கள் அறக்கட்டளை' நிறுவனத் தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து, டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:

சர்க்கரை நோய், 'டைப் 1' மற்றும் 'டைப் 2' என இரண்டு வகைப்படும். பொதுவாக பலருக்கு 'டைப் 2' சர்க்கரை நோய் பாதிப்பு தான் அதிகம் காணப்படும். 'டைப் 1' சர்க்கரை நோய் என்பது மிகவும் அபாயகரமான நோயாகும்.

1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை குறைபாடு, அதிக பசி உள்ளிட்டவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்த நோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தவறினால் 'டயபடிக் கோமா' என்று சொல்லக்கூடிய நிலைக்குச் சென்று மரணம் ஏற்படும்.

இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'இதயங்கள் அறக்கட்டளை' துவங்கி நடத்தி வருகிறேன்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் இன்சுலின் மற்றும் மருந்து வழங்கி வருகிறோம்.

எங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு தொடர்ந்து இன்சுலின் மற்றும் மருந்து உதவி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக 'சக்தி' என்ற திட்டத்தை துவக்கி உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளின் பெற்றோருக்கு இலவசமாக பசுமாடுகள் வழங்கப்படும்.



இதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தேவைப்படும் இன்சுலின் மற்றும் மாத்திரைகள் வாங்க தாங்களாகவே வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

முதல் கட்டமாக 3 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பசு மாடுகளை வழங்கி உள்ளோம். இந்த உன்னதமான பணிக்கு உதவி அளிக்க விரும்பும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எங்கள் அறக்கட்டளையை 9042858882, 8526421150 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு ஆண்டு முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்து வழங்க 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு, டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...