கோவையில் 6-லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: சுகாதாரத்துறை தகவல்

கோவை மாவட்டத்தில் 6-லட்சம் போ் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் 6 லட்சம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எளிதில் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியிலிருந்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 700 போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். இவர்களில் நேற்று மாலை நிலவரப்படி 27 லட்சத்து 69 ஆயிரத்து 673 போ் முதல் தவணையும், 14 லட்சத்து 94 ஆயிரத்து 60 போ் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 99 சதவீதம் போ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில், 2 ஆம் தவணை தடுப்பூசியை 53 சதவீதம் போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கிடையே 3 மாத இடைவெளி இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. 2 ஆம் தவணைக்கான நாள்கள் கடந்தும் கிட்டத்தட்ட 6 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நேற்று வரை 6 லட்சம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பலர் 2 ஆம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாள்களிலும், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 40 நாள்களுக்குள்ளும் 2 ஆம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே 2 ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...