கிணத்துக்கடவு முத்துகவுண்டனூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி..!

போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த காளை மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு அரை பவுன் தங்க காசும், இரண்டாவது இடத்தை பிடித்த மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு கால் பவுன் தங்க காசு மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு முத்துகவுண்டனூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டியில், 100க்கு மேற்பட்ட நாட்டு இன காளைகள் பங்கேற்றன.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூர் ரோட்டி திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை, தாராபுரம், கேரளா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான நாட்டு இன காளை மாடுகள் கலந்துகொண்டது.



இந்த போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை நோக்கி ஓடியது.



ரேக்ளா போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த காளை மாடு ஜோடி உரிமையாளர்களுக்கு அரை பவுன் தங்க காசும், இரண்டாவது இடத்தை பிடித்த மாடு ஜோடிக்குக் கால் பவுன் தங்க காசு மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...