ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம்: கோவையில் சாலை மறியல்..! விசாரணை மேற்கொள்ள சென்ற அதிகாரிகள், கேரளாவில் சிறைப்பிடிப்பு..!

சம்பவத்தில் ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை, கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறைபிடித்துள்ளனர்.


கோவை: கோவைகாந்திபுரம் பகுதியில் கேரள அரசை கண்டித்து பெரியார் திராவிட கழகம் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை நவக்கரையில் நேற்று ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறைபிடித்துள்ளனர்.



தமிழன வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண் சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் வனக் காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு ரயில் நிலையத்தில் சிறைபிடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரள அதிகாரிகள் சிறை பிடித்துள்ளதை கண்டித்து கோவை மலையாள சமாஜம் அமைந்துள்ள சாலையில் தந்தை திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...