கோவையில் வீட்டுக்குள் புகுந்து 48 பவுன் நகையை கொள்ளையடித்த பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு..!

சித்தாபுதூர் பகுதியில் முதியவரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டுக்குள் புகுந்து 48 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ் (75). இவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது பக்கத்து வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வந்தார். ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்து வந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தொழில் தேவைக்காக என்னிடம் ரூ. 17 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லை.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த செந்தில்குமாரி வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டார்.

எனவே, அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் முதியவரை ஏமாற்றி பணம் பெற்று 48 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...