கொடநாடு காவலாளி கொலை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை விசாரணை.!

கோவை கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலாளர் நடராஜனிடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.


கோவை: கோவை கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலாளர் நடராஜனிடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. இங்கு, கடந்த 2017, ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொள்ளை கும்பல் நுழைந்து, பணியிலிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.

பின்னர் பங்களாவிலிருந்த பல்வேறு ஆவணங்களையும், பொருட்களையும் திருடி சென்றது. சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முக்கிய குற்றவாளியான சாலை விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால், நண்பர் ரமேஷ், கனகராஜின் மனைவி மற்றும் மைத்துனர், குற்றவாளி சயான் உட்பட 6 பேர், சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த போலீசார், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட 40க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

எஸ்டேட் முழுவதும் மேற்பார்வை செய்து, பராமரிப்பு பணிகளை நடராஜன் செய்து வந்ததால் இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக அவருக்கு தகவல் தெரிந்திருக்கலாம் என்பதால் இந்த விசாரணை நடந்ததாகவும், இதில் அவர், பல தகவல்களை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...