கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு டிச.10 வரை நீதிமன்ற காவல்.!!

கோவை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இன்று மாலை மிதுன் சக்ரவர்த்தி போலீஸ் காவல் முடிந்து ஆஜர்ப்படுத்தப்பட்டு, டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இன்று மாலை மிதுன் சக்ரவர்த்தி போலீஸ் காவல் முடிந்து ஆஜர்ப்படுத்தப்பட்டு, டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 12-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் (31) பாலியல் அத்துமீறலால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில், போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைதொடர்ந்து, ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்.

அதனால் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5-நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனு மீதான விசாரணை நடைபெற்றதை அடுத்து, மிதுன் சக்கரவர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2-நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, இன்று மாலை மிதுன் சக்ரவர்த்தி போலீஸ் காவல் முடிந்து ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் 10-12-21 வரை மிதுன் சக்ரவர்த்திக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...