பொள்ளாச்சியை மையப்படுத்தி தென்னை நார் குழுமம்..! தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி..!!

உழவர் சந்தைகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஸ்மார்ட் கார்டு போல் மாற்றித் தர வேண்டும். அப்போது தான் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, நெகமம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் என்பது பெரும் வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக உள்ளது.



தென்னை மரத்தின் பலன் மூலம் 42 பொருட்கள் மதிப்பு கூட்டு முறையில் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயம் மூலம் இத்தொழில் நிறுவனங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று விவசாய நிலங்கள், நீர் பாதிக்காத வகையில் ஆய்வுக்கு உட்படுத்தி, தென்னை விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்கள் கோவைக்கு அறிவித்துள்ள போதும், தென்னை நார் தொழில் குழுமம் அமைக்க பொள்ளாச்சி பகுதியை மையப்படுத்தி ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்பதை வரவேற்கின்றோம்.



மேலும், மழைநீரை வீணாகாமல் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கற்கள் நட்டி பச்சை வண்ணம் பூச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து விவசாயிகள் பலர் கூறுகையில், "உழவர் சந்தைகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஸ்மார்ட் கார்டு போல் மாற்றி தர வேண்டும். அப்போது தான் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை குறைக்க முடியும்," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...