கோவை மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!

தன் மீது எத்தனை வழக்குப் போட்டாலும் கவலையில்லை எனவும், ஆனால் கோவை மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியிடம் இன்று காலை முதல் கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்த அவர், தற்போதைய அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் முந்தைய அரசு மீது குற்றம் சாட்டுவதாகக் கூறினார்.

தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும், தன் குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை எனவும், ஆனால் கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் பிரச்சினைகளை உடனடியாக சீர் செய்யாவிட்டால் ஒரு வாரக் காலத்திற்குள் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...