எஸ்.என்.ஆர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 04.01.2017 அன்று காலை 9 மணிக்கு நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.  

எனவே, இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...