பாலக்காடு ஆர்.எஸ்.எஸ் கொலை வழக்கு: இரண்டாவது நாளாக பொள்ளாச்சியில் விசாரணை.!!

பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27-கடந்த 15-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய 'மாருதி 800' கார், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏஜன்ட் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில், பழைய இரும்பு குடோன் வைத்திருக்கும் முருகானந்தம் என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, இரும்பு குடோனில் கேரள போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நேற்றும் இரண்டாவது நாளாக விசாரணை தொடர்ந்தது. கேரள போலீசார், தடயவியல் நிபுணர் குழுவுடன், குஞ்சிபாளையம் பிரிவு இரும்பு குடோனில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கேரள போலீசார் கூறியதாவது:-

கொலையாளிகள் பயன்படுத்திய காரை உறுதி செய்யும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரின் உதிரிப்பாகங்கள் பாதி விற்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கேயும் ஒரு 'டீம்' போலீசார் சென்று, காரின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...