பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையில் மாட்டுவண்டியில் வந்து பாஜகவின் விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்..!

மேலும், திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


கோவை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையில் மாட்டுவண்டியில் வந்து பாஜகவின் விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில் அதனை தொடர்ந்து சில மாநிலங்களில் விலை குறைந்தது. இருப்பினும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பெட்ரோலுக்கு ரூ.3 குறைந்திருந்த நிலையில், மத்திய அரசின் விலை குறைப்பு அமலுக்கு வரவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி தமிழக பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக, 2014ம் ஆண்டில், பெட்ரோல் மீது ரூ.9.20 ஆக இருந்த மத்திய அரசின் வரி, 2021ல் ரூ.32.90 ஆக உயர்த்தியிருக்கிறது. அதேபோன்று, 2014 - ல் டீசல் மீது ரூ.3.46 ஆக இருந்த மத்திய அரசின் வரி, 2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் மத்திய அரசின் வரியை உயர்த்தியிருக்கிறது.



அதனை கண்டிப்பதாக பாஜகவின் விவசாய அணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, பாஜகவில் விவசாய பிரிவினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மாட்டுவண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து, உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...