கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகளை விடுதலை செய்ய பரிசீலனை..!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று, அவர்கள் வெளியே சென்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.


கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகளை விடுதலை செய்ய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று அவர்கள் வெளியே சென்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகள் கடந்தவர்கள் 150-க்கும் மேலானவர்கள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நன்னடத்தை அடிப்படையில் 99 கைதிகளை விடுதலை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களை விடுதலை செய்வதற்கான பணிகள் மற்றும் இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறுதி ஒப்புதல் பெற்றவர்களை விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...