மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை ஒட்டி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் விழா இன்று கோவை காந்திபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 67வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். மேலும், கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக கேக்கினை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், பிரபாகரனின் செயல் மற்றும் தியாகங்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து, மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.