ஈரோடு நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கு: 4-பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனை..!

நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் 4-பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95-லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் 4-பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95-லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ல் ஈரோட்டில் செயல்பட்டு வந்த அன்பு பவுல்ட்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம் நடத்தி 107 முதலீட்டாளர்களிடம் ரூ.2.25 கோடி மோசடி நடைப்பெற்றது.

நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சசி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3-பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம் மூவரும் சேர்ந்து செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ரத்தினசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூ.1.50 லட்சம் செலுத்தினால், செட் அமைத்து கொடுத்து, 3750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுத்து, அதற்குத் தேவையான மருந்துகள், தீவனங்கள் ஆகியவற்றையும் கொடுத்து, மாதம் மற்றும் ஆண்டுதோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகையாகக் கொடுப்பதாகவும், மூன்று வருட கால ஒப்பந்தம் என விளம்பரம் செய்து மோசடி செய்யப்பட்டது.

முதலீட்டாளர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளில் சிறுக சிறுக பணம் கொடுத்து முழுவதுமாக மோசடி செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டது.

அதனால், மோசடி பிரிவிற்கு மட்டும் தண்டனை பெற்ற 3 பேருக்கும் தலா ஒரு நாள் சிறைத் தண்டனையும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் 3 பேரும் சேர்ந்து செலுத்தவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...