திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தர்ணா..!

மாவட்ட ஆட்சியர் கட்டாயம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவசாயிகள் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர்.

ஆனால், எப்போதும் நடைபெறும் கூட்ட அரங்கு அல்லாமல் கீழ்த்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த நிலையில், புதிதாக மாற்றப்பட்ட கூட்ட அரங்கில் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இல்லாதது மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வருவதாகவும் தெரிவித்து விவசாயிகள் இன்றைய தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அல்லாமல், மனுவாக அளிக்கும் வகையில், குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஏற்கனவே இருந்த நடைமுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் கட்டாயம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...