திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் முழுவதுமாக அடைப்பு..!

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இன்று பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 முதல் 150 வரை விலை உயர்த்தப்பட்டு, 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்றைய தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தன.

இந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அது சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...