கோவையில் மழை கொட்டி தீர்க்க போகிறதாம்...!! - வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் எச்சரிக்கை

நவம்பர் 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொங்கு பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 நாட்களில் தமிழ்நாடு, கேரளாவின் எந்தப் பகுதிக்கும் பயணத்தைத் திட்டமிட வேண்டாம்.


கோவை: தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால், இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் "ஆரஞ்ச்" அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இன்று மாலை முதல் கோவை, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்து வரும் 5 நாட்களுக்கு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை நிலவரம் குறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது, பெய்யும் மழை வெறும் டிரெய்லர் மட்டுமே!! தமிழகம் முழுவதும் இன்னும் பல தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

"அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும். டிசம்பர் 2ம் தேதி வரை மிக கனமழை பெய்யும். இடையில், இடைவெளிகள் இருக்கும். ஆனால் கொட்டி தள்ள போவது உறுதி!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிலம் ஏற்கனவே செறிவூட்டும் அளவை எட்டியுள்ளது. நமது அரசாங்கம் இந்தச் சூழலை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படும் என்று நம்புகிறோம். அரசு சொல்வதை நாம் பின்பற்ற வேண்டும்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரவிருக்கும் நாட்களில் குறையப்போவதில்லை, ஏனெனில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும். டெல்டா, தென்தமிழ்நாடு மற்றும் வடதமிழ்நாடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், கனமழை எதிர்பார்க்கபடுவதால் வயல்வெளிகளில் வடிகால் அமைத்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற வழிவகை செய்து கொள்ளவும்.

நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்டா, தென் தமிழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்யும். வடகொங்கு பகுதிகளில் மிதமான மழை பெய்யும். தென் கொங்கு மண்டலத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொங்கு பகுதிகள், வட தமிழகம், டெல்டா மற்றும் தென் தமிழகத்திற்கு மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 நாட்களில் தமிழ்நாடு, கேரளாவின் எந்தப் பகுதிக்கும் பயணத்தைத் திட்டமிட வேண்டாம்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், மலைத்தொடர்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் மிகக் கனமழை பெய்யும். அடுத்த 1 வாரம் சூரியன் வெளியே வராது, எனவே துணிகளை உலர்த்துவது ஒரு கவலையே. பொதுமக்களும் விவசாயிகளும் எங்கள் முன்னறிவிப்பின்படி உங்கள் வேலையைத் திட்டமிடுங்கள்.

இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...