நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்.!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித்தை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்துக் கூறப்படுவதாவது:- நீலகிரி மாவட்ட ஆட்சியராக (கூடுதல் பொறுப்பு)வகித்து வந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராகப் பதவி வகித்து வந்துள்ளார். முன்னதாக, யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த இன்னொசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி. நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...