வறுமை ஒழிப்பு கோவை தான் முதலிடம்!!!

'வறுமை ஒழிப்பு' என்ற பிரிவில் 87-மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மற்றும் மதுரை 80-மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை 65-மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.


கோவை: நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் 'நிதி ஆயோக்' தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் முதல் முறையாகத் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தமாக 56 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்பற்றுவதைக் கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போன்ற முக்கிய பணிகளை மத்திய அரசின் 'நிதி ஆயோக்' மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளை ஜெர்மனியைச் சேர்ந்த வளர்ச்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி ஆயோக் இந்த பட்டியலை வெளியிட்டது.

இதில் கோவை 73.29 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றுள்ளது. அதேபோல் திருச்சி 70 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது. சென்னை 69.36 மதிப்பெண்களுடன் 16-வது இடத்தையும், மதுரை 65.85 மதிப்பெண்களுடன் 26-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் சிம்லா 75.50 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 'வறுமை ஒழிப்பு' என்ற பிரிவில் 87 மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மற்றும் மதுரை 80 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை 65 மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...