கோவையில் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்..!

துடியலூர் அருகே யானை கூட்டம் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: துடியலூர் அருகே யானை கூட்டம் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை துடியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்கு சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதும், விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூர் பகுதியில் செல்வராஜ், ராஜசேகர், குமாரசாமி, வெங்கடேசன், பிரபாகரன், மணி ஆகியோருக்கு சொந்த விவசாய தோட்டங்கள் உள்ளது. இங்கு அவர்கள் அனைவரும் வாழை பயிரிட்டுள்ளனர். வனத்தை விட்டு வெளியில் வந்த 8-யானைகள் இவர்களது தோட்டத்திற்குள் புகுந்தது.



அங்கு பயிரிட்டிருந்த வாழை மரங்களை நாசப்படுத்தியது. அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் பின்னர் ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் மற்றும் பைப் லைனையும் உடைத்து சேதப்படுத்தியது. யானைகள் சேதப்படுத்தியதில் 1 லட்சம் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக துடியலூர், பன்னிமடை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிகின்றன.

அப்படி வரும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...