படப்பிடிப்பு நடத்துவதற்குக் காவல் துறை, நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கவேண்டும், அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக எப்படிப் படப்பிடிப்பு நடத்தினீர்கள், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அனுமதியின்றி நடைபெற்ற சினிமா படப்பிடிப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சைரன் பொருத்திய காவல் உயரதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப் நின்று கொண்டிருந்தது.

உயர் அதிகாரிகள் வந்து இருப்பார்கள் என நினைத்து அவ்வழியாக சென்ற போலீசார் பார்த்த போது அங்குள்ள மகளிர் அழகு நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு சென்று விசாரித்தபோது சினிமா சூட்டிங் நடப்பது தெரியவந்தது.
புதிய இயக்குனர் கார்த்தி இயக்கும் படத்தில் தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அசோக்செல்வன் நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என தெரியவந்ததை இதனையடுத்து போலீசார் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று விசாரித்த போது அங்கிருந்த படக்குழுவினர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
படப்பிடிப்பு நடத்துவதற்குக் காவல் துறை, நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கவேண்டும் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக எப்படிப் படப்பிடிப்பு நடத்தினீர்கள், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சயிரன் பொருத்திய காவல் வாகனத்தை அவசர அவசரமாகப் படக்குழுவினர் எடுத்துச் சென்றனர். அனுமதியின்றி நடைபெற்ற சினிமா படப்பிடிப்பு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.