திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மனநலம் பாதித்த கணவன்..!

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.


கோவை: திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் மனைவியை மனநலம் பாதித்த கணவன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நடுபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (65).



இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. பூங்கொடி அருகிலுள்ள நூல் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பூங்கொடி மில் வேலைக்குச் சென்றார். பின்னர் வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குருநாதன், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வாக்குவாதம் நடைபெறுவதாக குருநாதன் மகன் விநாயகத்திடம் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மகன் விநாயகன் வந்து சமாதானப்படுத்த முற்பட்ட போது வீட்டில் இருந்த இரும்பு கம்பி (கடப்பாரை) கொண்டு தனது மனைவியை தலையிலும் கை, கால் என குருசாமி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரை தூக்க முற்பட்ட போது மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களுடைய வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி இறந்து கிடந்தார். அவர் அருகில் கடப்பாரை கிடந்தது. குருநாதன் தனது மனைவி பூங்கொடியை கடப்பாரையால் தாக்கிக் கொன்று விட்டுத் தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் பூங்கொடி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குருநாதனை தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...